Monday, October 25, 2010

தம்பி எங்க போகணும்?

தம்பதிகளின் விருப்பம்

ஒரு தம்பதியினர் கோயிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு கிணறு இருந்தது. அது விருப்பத்தை நிறைவேற்றும் கிணறு. அதனிடம் சென்று கணவன் தன் விருப்பத்தைக் கூறிவிட்டு வந்தான்.பிறகு மனைவி அந்த கிணற்றுக்கு அருகே சென்றாள். அவளுக்கு உயரம் போதாததால் கொஞ்சம் எட்டிப்பார்த்தால். அவ்வளவுதான் அவள் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள்.

கணவன் பதறியபடி, நிஜமாகவே பலிக்கிறதே என்றான்.

*************************************************************************************
ஹலோ.. போலிஸ் ஸ்டேஷனா? கேடி கபாலியை பிடிச்சி வச்சிருக்கோம்.. சீக்கிரம் வாங்க.
தப்பிச்சிடாம பார்த்துக்கோங்க... நிறைய மாமுல் பாக்கி இருக்கு...!

*************************************************************************************
ஜோசியர்- உங்களைத்தேடி மஹாலட்சுமி வரப்போறா
கேட்பவர்- ஏற்கனவே...வீட்ல இருக்கிற தனலட்சுமி கிட்ட அனுபவிச்சுக் கிட்டு இருக்கேன்..மஹாலட்சுமியும் வந்துட்டா அவ்வளவுதான்

*************************************************************************************
ஒரு பொறியியல் கல்லூரி வாசல் முன் தம் பிள்ளையை படிக்க வைக்க வந்த பெற்றோர்...
பெற்றோர் : இந்த காலேஜ் நல்ல காலேஜா?
வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.
பெற்றோர் : அப்படியா!!
வாட்ச்மேன் : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு.

*************************************************************************************
கண்டக்டர்: ஏப்பா தம்பி எங்க போகணும்?

கொஞ்சம் நகருங்க! அந்த ப்ளூ சுடிதார்கிட்ட போகணும்!

*************************************************************************************
ஆசிரியர்: ஏன்டா college பக்கம் 20 நாளா வரல ?

மாணவன் : எங்க அப்பாதான் சார் "ஒரு எடத்துக்கு அடிக்கடி போனா மரியாதை இருக்காதுன்னு " சொன்னார்.

*************************************************************************************
ஆசிரியர்: காந்திஜியின் கடின உழைப்பினால் ஆகஸ்ட் 15 அன்று நாம் என்ன பயன் பெற்றோம்?

மாணவன்: ஒரு நாள் விடுமுறை!

*************************************************************************************
ஆசிரியர்- உன் வயசுலே பில் கேட்ஸ் ஸ்கூல்ல எல்லாவற்றிலும் ஃபர்ஸ்டா இருந்தார்
மாணவன்- உங்க வயசுல ஹிட்லர் கூடத்தான் தற்கொலை பண்ணிண்டார்

*************************************************************************************
உங்க வீட்டுல மாமியார் மருமகள் சண்டை நடந்தா நீங்க எந்த பக்கம்?
பயங்கர ஆயுதங்களோட யார் இருக்காங்களே அவங்க பக்கம்.

*************************************************************************************
இன்னிக்கு என்ன உன் மாமியார் சந்தோஷமா இருக்காங்க?
இன்னிக்கு நாங்கள் போடற சண்டை இண்டர் நெட்டிலே தெரியப்போகுதாம்.

*************************************************************************************
டாக்டர்! எனக்கு பல் ஆடுது!

எந்த பாட்டுக்கு?

*************************************************************************************

தங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.....

Sunday, October 24, 2010

என் சங்கத்து ஆளை அடிக்கதவன் எவண்டா?

ஆசிரியர்:வாட்டிஸ் யுவர் நேம்???

மாணவன்:சூரிய பிரகாசம்..

ஆசிரியர்:நான் கேள்வியை இங்லிஷ்ஷில் கேட்டால்,நீ அத‌ற்கு இங்லிஷ்ஷில் தான் பதிலலிக்க வேண்டும்..

மாணவன்:சன் லைட் மிஸ்..

ஆசிரியர்:உன் பேர் என்ன???

மாணவன்:ப்ரேட் டீ மிஸ்..

ஆசிரியர்:என்ன இது??? ஒழுங்கா உன் பேர சொல்லு...

மாணவன்:பாண்டீ மிஸ்..

ஆசிரியர்:1869இல் என்ன நடந்தது???

மாணவன்:மாகாத்மா காந்தி பிறந்தார்..

ஆசிரியர்:1873இல் என்ன நடந்தது?

மாணவன்:காந்தி 4 வயதை அடைந்தார்...

ஆசிரியர்: What is the full form of maths?

மாணவன்: Mentally affected teachers harassing students..

ஆசிரியர்:காந்திஜீயின் கடின உழைப்பால் ஆகஸ்டு 15 நம‌க்கெல்லாம் என்ன கிடைத்தது?

மாணவன்:ஒரு நாள் லீவு கிடைத்தது..

ஆசிரியர்:உன்னோட அப்பாட வயசென்ன???

மாணவன்:என்னோட வயசுதான் சார்..

ஆசிரியர்:எப்டீடா???

மாணவன்: நான் பிறந்தாப்பிறகு தானே அவர் அப்பா ஆகினாரு..அதான்..

எப்பிடி நம்ம சின்ன பசங்களோட ச்ச்சுட்ட்டிதனம்???

******* ****** *******

காதலி : உங்களை பாத்தா எனக்கு உலகமே மறந்து போயிடுது டியர் . . . .

காதலன் : ப்ளீஸ் . . . . அப்படியே என்னையும் மறந்துடேன் . .

******* ****** *******

காதலி : ஏங்க நாளை முதல் உங்களைப் பார்க்க பீச்சுக்கு வர மாட்டேன்

காதலன் : ஏன் டியர்.....

காதலி : எங்கப்பா என்னை மிரட்டுறாருங்க....

காதலன்: என்ன டியர் மிரட்டுறார்.....?

காதலி : இப்படி பார்க், பீச்சுன்னும் அவன் கூட சுத்துன்னா, அவனையே உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சுருவேன்னு சொல்றார்.....

******* ****** *******

காதலன் : அன்பே, நான் உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகின்றேன் டியர். வா ஓடிப் போகலாம்.....

காதலி : முதிலில் ஒரு "அப்பாச்சி" வண்டி வாங்கு, என்னால ஒடி வர முடியாது....

******* ****** *******


******* ****** *******


நகைச்சுவை பிடித்திருந்தால் மறக்காமல் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.


Monday, October 18, 2010

கொஞ்சம் சிரிங்கப்பா......!!!!!!

மென்பொருள் துறையில் போலியாக அனுபவங்களைச் சொல்லி வேலையில் சேருகிறார் ஒருவர்.

முதல் நாள் அலுவலகத்தில்,

புதியவர்: சார், என் கம்ப்யூட்டர் ஹேங் ஆயிருச்சு, என்ன பண்றது?

அருகிலிருப்பவர்: டாஸ்க் மேனேஜரைப் பாருங்க.

உடனே எழுந்த புதியவர், அலுவலகம் முழுவதும் தேடி.. களைத்து, மீண்டும் அருகிலிருப்பவரிடம்,

சார், ஆபிஸ் முழுக்க தேடிவிட்டேன். ப்ராஜ்க்ட், டீம், புரொடக்ஷன் மேனேஜர்கள்தான் இருக்கிறாங்க. டாஸ்க் மேனேஜரைக் காணோமே!****

காதலர்களுக்கிடையேயான உரையாடல்:

திருமணதிற்கு முன் கடற்கரையில் காத்திருக்கையில்,

காதலன்: அப்பாடா! ஒரு வழியாய் சரியான இடத்திற்கு வந்தாயா? நான் காத்திருந்தது வீண் போகவில்லை.

காதலி : என்னை விட்டு விலகப் போகிறாயா?

காதலன்: இல்லை. நான் அதைப் பற்றி எண்ணியது கூட இல்லை.

காதலி: என்னைக் காதலிக்கிறாயா?

காதலன்: ம்ம்.. ரொம்ப.. ரொம்ப..

காதலி: எப்போதாவது என்னை ஏமாற்றியுள்ளாயா?

காதலன்: இல்லை. ஏன் அதையே எப்போதும் கேட்கிறாய்?

காதலி: என்னை முத்தமிடுவாயா?

காதலன்: வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்.

காதலி: என்னை அடிப்பாயா?

காதலன்: என்ன விளையாட்டு இது? நான் அப்படிப்பட்டவன் இல்லை

காதலி: உன்னை நான் நம்பலாமா?

காதலன்: நிச்சயமாய்.

காதலி: எனக்காக எப்போதும் சில நிமிடம் செலவழிப்பாய் என நினைக்கிறேன்.

திருமணத்திற்கு பின், காதலருக்கிடையேயான உரையாடல்:

மேலே உள்ள உரையாடலை கீழிருந்து மேலே படிக்கவும்.

*****************
வாத்தியார் : எங்கே முட்டாள்களெல்லாம் எழுந்து நில்லுங்க!
சிறிது நேரம்வரை யாரும் எழுந்திருக்கவில்லை. பின்பு ஒருவன் மட்டும் தயங்கி தயங்கி எழுந்து நிற்கிறான்.
வாத்தியார் : (எல்லோரும் ஏளனமாக சிரிக்கின்றனர்!) நீ முட்டாள் என்று எப்படித் தெரியும்?
மாணவன் : அதெல்லாம் ஒன்றும் இல்லை! நீங்கள் தனியாக நிற்கிறீர்களே, அதனால்தான்!

*************

பார்த்திபன் : இந்த செல்போன்ல எந்த கார்டு வேணாலும் போடமுடியுமா?

வடிவேலு : ஓ! முடியுமே..

பார்த்திபன் : இந்த ரேஷன் கார்டைப் போட முடியுமா?

வடிவேலு : உஷ்ஷ்..! முடியல... !

***********

பீலிங்ஸ் ஆஃப் இந்தியன்ஸ்

ரமேஷ் : என்னைக் கடிச்ச கொசுவைப் பிடிச்சேன். அப்புறம் கொல்லாம பறக்க விட்டுட்டேன்.
சுரேஷ் : ஏண்டா?
ரமேஷ் : பயபுள்ள.. அது உடம்புல(!) இருக்கறது நம்ம ரத்தமாச்சேடா! அந்தப் பாசம்தான்.

****

கணக்கு டீச்சர்: உங்க அம்மாவை மம்'னு கூப்பிடற நீ, உங்க பெரியம்மா சின்னம்மா வை எப்படி கூப்பிடுவ?

மாணவன்: minimum, maximum nu கூப்பிடுவேன்..

டீச்சர்: ??!

***********
டீச்சர்: உண்மையான தமிழன் யாரு....?

மாணவன்: இங்கிலீஷ் பரீச்சையில் பெயில் ஆகுறவன் சார்..

*************************

அப்போ எனக்கு ஆறு வயசு, நான் முதல் வகுப்பில் படித்தபோது ஒரு ஆசிரியர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.
டீச்சர்: நான் உன்னிடம் நான்கு ஆப்பிள் தருகிறேன். அதை எப்படி நீ ஐந்து பேருக்கு பிரித்து கொடுப்பாய்?

நான்: எனக்கு வேண்டாம் மிஸ், அவங்க நாலு பேருக்கும் கொடுங்க.

கதை: அப்போ இருந்தே நான் ரொம்ப நல்லவன். இப்படிக்கு நல்லவன்.

**********

ரஜினியின் ரோபோட் கதை:

ஒரு பொண்ண லவ் பண்ண ரோபோட் ஆ இருந்தாலும் சாவுதான்.

*********

மச்சி அனுஷ்கா ப்ரெக்னன்ட் ஆ இருக்கா.. அதனால எல்லா மீடியா வும் என்னை தேடிகிட்டு இருக்கு. அதனால நான் அமெரிக்காவுக்கு எஸ்கேப் ஆயிட்டேன். நீயும் எஸ்கேப் ஆயிடு. ஏன்னா அனுஷ்கா வோட நாய் ப்ரெக்னன்ட் ஆ இருக்கு.
கில்லாடி மச்சி நீ.

*******

இனிமே யாரவது அந்த சங்கம் இந்த சங்கம்னு சொல்லி மெசேஜ் அனுப்புனீங்க ராஸ்கல் பிச்சி போடுவேன் பிச்சி..

இப்படிக்கு,
சங்கங்களை ஒழிப்போர் சங்கம்.
********

எலக்ஷன் பாட்டு:
கருணாநிதி: கோடம்பாக்கம் ஏரியா... வோட்டு போட வாரியா... என் கூட போட்டி போட நீ ரெடியா...

அம்மா: நீ டுபாக்குரு ஆளுடா ..மொள்ளமாரி நாய்டா.. என்கிட்ட போட்டிபோட நீ யாரு டா...

கருணாநிதி: அடியே... அடியே.... நீ யாருகிட்ட மோதி புட்ட கேட்டு பாருடி....

அம்மா: கெழவா.. கெழவாவா.... நான் எம்.ஜி.ஆர். ஜோடி தான் கேட்டு பாருடா...
**********

யாரும் தவறாக என்ன வேண்டாம். இவை சற்று ஒரு நகைச்சுவைதான்... தவறு இருந்தால் மன்னிக்கவும்.

நகைச்சுவை பிடித்திருந்தால் தங்கள் கருத்துக்களை பகிரவும்....

Saturday, October 2, 2010

பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு!


பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. ஏதேனும் சக தோழியைக் கண்டால் உற்சாகமான உரையாடலை சட்டென ஆரம்பித்து விடுகிறார்கள். கடைவீதி, அலுவலகம், ஆலயம் ஏன் சுட்டெரிக்கும் தார் ரோடு என்றால் கூட இந்த உரையாடல் தடைபடுவதில்லை.

நலமா எனத் தொடங்கும் உரையாடல் குழந்தைகள், வீடு, வேலை, மாமியார், நண்பர்கள் என கிளை விட்டுப் பரந்து விரிந்து பொழுது போவதை அறியாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

பெண்களின் உரையாடல் பெரும்பாலும் வறட்டு உரையாடலாய் இருப்பதில்லை. சிரிப்பும், கேலியும், கிண்டலும், உற்சாகமும் என உலகத்தின் மிக முக்கியமான பணி உரையாடல் என்பது போல அவர்கள் அதில் ஒன்றி விடுவார்கள்.

ஆண்கள் பலருக்கும் இந்த கலை வாய்ப்பதில்லை. "நலமா ?" என ஆரம்பிக்கும் உரையாடல் "நல்லா இருக்கேன்" என்ற பதிலைக் கேட்டபின் எப்படித் தொடர்வது என தெரியாமல் நொண்டியடிக்கும்.

அதனால் எழுகின்ற பொறாமையோ என்னவோ " இந்தப் பெண்களே இப்படித்தான், யாரையாவது பார்த்தால் போதும் மணிக்கணக்காய் பேச ஆரம்பித்து விடுவார்கள்" என ஆண்கள் அடிக்கடி அலுத்துக் கொள்கிறார்கள்.

இப்படி மனம் விட்டு உரையாடுவதும், நண்பர்களுடன் பேசி மகிழ்வதும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது எனும் புதிய ஆராய்ச்சி ஒன்றை மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டு கதை பேசும் பெண்களின் மனதில் இன்னும் கொஞ்சம் இன்பத்துப் பால் வார்த்திருக்கிறார்கள்.

மனித உடலிலுள்ள புரோகெஸ்ட்ரோன் எனும் ஹார்மோன் மன அழுத்தத்தையும், கவலை, பதட்டம் போன்றவற்றையும் குறைக்கக்கூடிய தன்மை உடையது. மனம் விட்டுப் பேசி சிரித்து உரையாடும் பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் அதிக அளவில் இருப்பதாகவும், இதுவே பெண்களின் மன மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தருவதாகவும் அவர்கள் மருத்துவ விளக்கமும் அளிக்கின்றனர்.

இத்தகைய உரையாடல்கள் வெறுமனே பொழுது போக்காக மட்டும் அமைந்து விடாமல் பெண்களுடைய நட்பு இறுக்கத்துக்கும், உதவும் மனப்பான்மைக்கும் கூட துணை செய்கிறதாம்.

ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் தொலைக்காட்சித் தொடர்களில் மாலை நேரம் முழுவதும் செலவிடும் பெண்களுக்கு உரையாடலுக்காய் செலவழிக்கும் நேரம் குறைந்து கொண்டே வருகிறது என்பது கண் கூடு. அத்தகைய சற்றும் பயன் தராத தொலைக்காட்சித் தொடர்களை விலக்கி விட்டு ஆரோக்கியமான உரையாடலுக்குப் பெண்கள் திரும்ப இந்த ஆராய்ச்சி அழைப்பு விடுக்கிறது.