Friday, December 31, 2010

சன்டிவி மேல கேஸ் போடணும்.!

டாக்டர் - எப்படி அடி பட்டுச்சி.?
patient – பஸ்- போறப்பவிஜய்படம் போட்டாங்க,
தியேட்டர்-னு நினைச்சு வெளிய வந்துட்டேன்.
Doctor-??\

********************************************************************************

சன் டிவி:

விஜய் : நம்ம சன்டிவி மேல கேஸ் போடணும்.

மேனேஜர் : எதுக்கு சார்

விஜய் : என்னோட அடுத்தபடம் ஹிட் ஆகும்னு சொன்னத, விளையாட்டு செய்தியில போட்டு இருகாங்க..

********************************************************************************

டைரக்டர் – வடிவேலு போடலாமா, இல்ல கருணாஸ் போடலாமா

விஜய் – காமெடி கூட நானே பண்ணுறேன் சார்

டைரக்டர் – காமெடி நீங்க தான் பண்றீங்க. நான் ஹீரோ யாரா போடலாம்னு நினச்சிட்டு இருக்கேன்.

********************************************************************************

தமிழ் ரீமேக் பாடல்.

ஹாய் சார்,
நா இத சொல்லியே ஆகனும்...
கொஸ்டின்பேப்பர் அவ்ளோ கஷ்டம்..
இங்க எவனும் இவ்ளோ கஷ்டமா ஒரு..
இவ்ளோ கஷ்டமான பேப்பர் பாத்துருக்கமாட்டாங்க..
திங்க் இந்த வடியும் எக்ஸாம் ஊத்திக்கிச்சி.…

முன்தினம் படிச்சேனே ..
படிச்சதும் மறந்தேனே..
சல்லடை கண்ணாக உள்ளமும் புன் ஆனதே..
இத்தனை நாளாக
புக்கை நான் பாராமல், விளையாடி இருந்தேனோ
ஹாலிடேசும் வீணானதே!


உங்களுக்கும் விஜய் பிடிக்குமா?

Wednesday, November 10, 2010

தூக்கிருவோமா அவனை..........................!!!!

அது ஒரு குறுகலான தெரு. எதிரே வருகிற காருக்கு ஒதுங்க நினைத்து ஓரமாக நகர்ந்தால்.. போச்சு.....சாக்கடையில்தான் போய் விழு வேண்டியிருக்கும். அந்த இடுமுடுக்குக்கிலும் கார்களும் ஆட்டோக்களும் போய் வந்து கொண்டிருந்தன.. வண்டி பழுது நீக்க அங்கே இருந்த ஒர்க்சாப் வந்திருந்தேன்.

மாலை வேளை.... தெருவில் நடமாட்டம் நிறைந்திருந்தது.

தெருவின் இடப்புறமிருந்து உச்சபட்ச வேகத்தில் ஒரு லான்சர் கார்.. சிறுத்தைபோல சீறிக்கொண்டு..வந்தது. காரின் கறுப்பு கண்ணாடிகள் ஏற்றப்பட்டிருந்தன. உள்ளே ஓசையுடன் துடித்துக் கொண்டிருந்த பாட்டு வெளியே ஊடுருவி நெஞ்சில் அறைந்தது.
அது வந்த வேகத்தில் எதிரே வந்த சைக்கிள் காரன் சாக்கடைக்குள் சரிந்தான். வேட்டோசையில் அலறி எழும்பும் பறவைகள் போல பாதசாரிகள் சாலையோரமாய் சிதறினர்.

“எழுவுடுத்த பய.. இப்படியா வண்டி ஓட்டுவான்..”

வண்டி சரக்கென்று பிரேக் அடித்து வலதுபுற காம்பவுண்டுக்குள் நுழைந்து. ஒர்க்சாப்பில் வந்து நெரித்தபடி நின்றது. வேறெதுவும் இனி உள்ளே போவதற்கு இடமின்றி.

ஓட்டுனர் இருக்கையை விட்டு [கதவை திறந்தபடி] வெளியே வந்தவன் காரின் உயரம் கூட இல்லை. மீசை முளத்திருக்கவில்லை. ஓட்டுனர் உரிமம் வாங்கியிருக்கும் வாய்ப்பு இல்லை. பின் சீட்டில் அவனையொத்த இன்னும் நாலைந்து பேர். உயர் நிலை பள்ளியில் இருப்பவர்களாயிருக்க வேண்டும்.

வெளியே வந்தவன் பானெட்டை திறந்து காட்டி எதையோ சரி பண்ண சொல்லிவிட்டு வாசலருகே வந்து நின்றான். கார் சாவியை விரலில் வைத்து சுழற்றிக் கொண்டிருந்தான்.
பக்கத்து பள்ளியிலிருந்து அந்தவழியாக மாணவிகள் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

“லேய்.மாப்ள. அவன்கிட்ட என்னப் பத்தி சொல்லிப்பாரு. அப்படியே ஒண்ணுக்கு போயிருவான்” டிரைவர் தம்பி தொடங்கினார்.

“இல்ல மக்கா நான் பாக்கேன்னு தெரிஞ்சபிறகும் அவ பின்னாலெயே இவனும் போறான் மக்கா..”

“அதான் சொல்றேன். தூக்கிருவோமா. அவனை..”டிரைவர் தம்பியின் குரலில் ஏரியா அதிர்ந்தது.

“பிசிக்ஸ் வாத்தியார் இருக்கானே. அந்த கேணயனுக்கு சொந்தகாரன் மக்கா இவன். அதான் பாக்கேன்.”
“எவனா இருந்தா என்னல. இப்ப போவோமா. நான் தூக்குறேன் பார் அவனை. . எவன் கேட்கிறான் பாத்திருவோமா...”

ஒர்க்சாப்காரன் நிமிர்ந்து என்னை பார்த்தான். லேசாக சிரித்தான். பிறகு வேலையில் கவனமாகி விட்டான். கேட்டுக்கேட்டு சலித்திருப்பானோ.. தம்பி சலம்பல் யாரைக் கண்டும் கலங்காமல் வீராவேசமாய் தொடர்ந்து கொண்டே இருந்தது.

டிரைவர் தம்பிக்கு வில்லனாகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக யாரிடமாவது பரிந்துரைக்க வேண்டும்..

ஹா ஹா நல்ல இருந்தது அண்ணா, ஸ்கூல் படிக்கும் பசங்க இப்படி பேசும் போது சிரிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்......... நான் ஸ்கூல் படிக்கும் போது பல பெரியவர்கள் எங்களையும் பார்த்து இப்படி பேசாமல் சிரித்து இருக்கிறார்கள்....... கடைசியில் எதுவும் அறிவுரைக் கூறாமல் அப்படியே விட்டு இருப்பது நல்ல முடிவு....... ரசித்தேன்.

வாழ்த்துக்கள்

நீங்க அந்தக்காலத்துல மோட்டார்பைக்ல போய் விட்ட சவுடாலுகள இப்ப நம்ம வயசு பசங்க கார்ல வந்து செய்யுறானுங்க.... வயித்தெரிச்சல் படாம வாழ்த்தி அனுப்புங்க.

இங்க இருக்குறதெல்லாம் ஓகே. நீங்க எப்படி பள்ளியில் படிக்கும்போது....?????

Monday, October 25, 2010

தம்பி எங்க போகணும்?

தம்பதிகளின் விருப்பம்

ஒரு தம்பதியினர் கோயிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு கிணறு இருந்தது. அது விருப்பத்தை நிறைவேற்றும் கிணறு. அதனிடம் சென்று கணவன் தன் விருப்பத்தைக் கூறிவிட்டு வந்தான்.பிறகு மனைவி அந்த கிணற்றுக்கு அருகே சென்றாள். அவளுக்கு உயரம் போதாததால் கொஞ்சம் எட்டிப்பார்த்தால். அவ்வளவுதான் அவள் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள்.

கணவன் பதறியபடி, நிஜமாகவே பலிக்கிறதே என்றான்.

*************************************************************************************
ஹலோ.. போலிஸ் ஸ்டேஷனா? கேடி கபாலியை பிடிச்சி வச்சிருக்கோம்.. சீக்கிரம் வாங்க.
தப்பிச்சிடாம பார்த்துக்கோங்க... நிறைய மாமுல் பாக்கி இருக்கு...!

*************************************************************************************
ஜோசியர்- உங்களைத்தேடி மஹாலட்சுமி வரப்போறா
கேட்பவர்- ஏற்கனவே...வீட்ல இருக்கிற தனலட்சுமி கிட்ட அனுபவிச்சுக் கிட்டு இருக்கேன்..மஹாலட்சுமியும் வந்துட்டா அவ்வளவுதான்

*************************************************************************************
ஒரு பொறியியல் கல்லூரி வாசல் முன் தம் பிள்ளையை படிக்க வைக்க வந்த பெற்றோர்...
பெற்றோர் : இந்த காலேஜ் நல்ல காலேஜா?
வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.
பெற்றோர் : அப்படியா!!
வாட்ச்மேன் : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு.

*************************************************************************************
கண்டக்டர்: ஏப்பா தம்பி எங்க போகணும்?

கொஞ்சம் நகருங்க! அந்த ப்ளூ சுடிதார்கிட்ட போகணும்!

*************************************************************************************
ஆசிரியர்: ஏன்டா college பக்கம் 20 நாளா வரல ?

மாணவன் : எங்க அப்பாதான் சார் "ஒரு எடத்துக்கு அடிக்கடி போனா மரியாதை இருக்காதுன்னு " சொன்னார்.

*************************************************************************************
ஆசிரியர்: காந்திஜியின் கடின உழைப்பினால் ஆகஸ்ட் 15 அன்று நாம் என்ன பயன் பெற்றோம்?

மாணவன்: ஒரு நாள் விடுமுறை!

*************************************************************************************
ஆசிரியர்- உன் வயசுலே பில் கேட்ஸ் ஸ்கூல்ல எல்லாவற்றிலும் ஃபர்ஸ்டா இருந்தார்
மாணவன்- உங்க வயசுல ஹிட்லர் கூடத்தான் தற்கொலை பண்ணிண்டார்

*************************************************************************************
உங்க வீட்டுல மாமியார் மருமகள் சண்டை நடந்தா நீங்க எந்த பக்கம்?
பயங்கர ஆயுதங்களோட யார் இருக்காங்களே அவங்க பக்கம்.

*************************************************************************************
இன்னிக்கு என்ன உன் மாமியார் சந்தோஷமா இருக்காங்க?
இன்னிக்கு நாங்கள் போடற சண்டை இண்டர் நெட்டிலே தெரியப்போகுதாம்.

*************************************************************************************
டாக்டர்! எனக்கு பல் ஆடுது!

எந்த பாட்டுக்கு?

*************************************************************************************

தங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.....

Sunday, October 24, 2010

என் சங்கத்து ஆளை அடிக்கதவன் எவண்டா?

ஆசிரியர்:வாட்டிஸ் யுவர் நேம்???

மாணவன்:சூரிய பிரகாசம்..

ஆசிரியர்:நான் கேள்வியை இங்லிஷ்ஷில் கேட்டால்,நீ அத‌ற்கு இங்லிஷ்ஷில் தான் பதிலலிக்க வேண்டும்..

மாணவன்:சன் லைட் மிஸ்..

ஆசிரியர்:உன் பேர் என்ன???

மாணவன்:ப்ரேட் டீ மிஸ்..

ஆசிரியர்:என்ன இது??? ஒழுங்கா உன் பேர சொல்லு...

மாணவன்:பாண்டீ மிஸ்..

ஆசிரியர்:1869இல் என்ன நடந்தது???

மாணவன்:மாகாத்மா காந்தி பிறந்தார்..

ஆசிரியர்:1873இல் என்ன நடந்தது?

மாணவன்:காந்தி 4 வயதை அடைந்தார்...

ஆசிரியர்: What is the full form of maths?

மாணவன்: Mentally affected teachers harassing students..

ஆசிரியர்:காந்திஜீயின் கடின உழைப்பால் ஆகஸ்டு 15 நம‌க்கெல்லாம் என்ன கிடைத்தது?

மாணவன்:ஒரு நாள் லீவு கிடைத்தது..

ஆசிரியர்:உன்னோட அப்பாட வயசென்ன???

மாணவன்:என்னோட வயசுதான் சார்..

ஆசிரியர்:எப்டீடா???

மாணவன்: நான் பிறந்தாப்பிறகு தானே அவர் அப்பா ஆகினாரு..அதான்..

எப்பிடி நம்ம சின்ன பசங்களோட ச்ச்சுட்ட்டிதனம்???

******* ****** *******

காதலி : உங்களை பாத்தா எனக்கு உலகமே மறந்து போயிடுது டியர் . . . .

காதலன் : ப்ளீஸ் . . . . அப்படியே என்னையும் மறந்துடேன் . .

******* ****** *******

காதலி : ஏங்க நாளை முதல் உங்களைப் பார்க்க பீச்சுக்கு வர மாட்டேன்

காதலன் : ஏன் டியர்.....

காதலி : எங்கப்பா என்னை மிரட்டுறாருங்க....

காதலன்: என்ன டியர் மிரட்டுறார்.....?

காதலி : இப்படி பார்க், பீச்சுன்னும் அவன் கூட சுத்துன்னா, அவனையே உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சுருவேன்னு சொல்றார்.....

******* ****** *******

காதலன் : அன்பே, நான் உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகின்றேன் டியர். வா ஓடிப் போகலாம்.....

காதலி : முதிலில் ஒரு "அப்பாச்சி" வண்டி வாங்கு, என்னால ஒடி வர முடியாது....

******* ****** *******


******* ****** *******


நகைச்சுவை பிடித்திருந்தால் மறக்காமல் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.


Monday, October 18, 2010

கொஞ்சம் சிரிங்கப்பா......!!!!!!

மென்பொருள் துறையில் போலியாக அனுபவங்களைச் சொல்லி வேலையில் சேருகிறார் ஒருவர்.

முதல் நாள் அலுவலகத்தில்,

புதியவர்: சார், என் கம்ப்யூட்டர் ஹேங் ஆயிருச்சு, என்ன பண்றது?

அருகிலிருப்பவர்: டாஸ்க் மேனேஜரைப் பாருங்க.

உடனே எழுந்த புதியவர், அலுவலகம் முழுவதும் தேடி.. களைத்து, மீண்டும் அருகிலிருப்பவரிடம்,

சார், ஆபிஸ் முழுக்க தேடிவிட்டேன். ப்ராஜ்க்ட், டீம், புரொடக்ஷன் மேனேஜர்கள்தான் இருக்கிறாங்க. டாஸ்க் மேனேஜரைக் காணோமே!****

காதலர்களுக்கிடையேயான உரையாடல்:

திருமணதிற்கு முன் கடற்கரையில் காத்திருக்கையில்,

காதலன்: அப்பாடா! ஒரு வழியாய் சரியான இடத்திற்கு வந்தாயா? நான் காத்திருந்தது வீண் போகவில்லை.

காதலி : என்னை விட்டு விலகப் போகிறாயா?

காதலன்: இல்லை. நான் அதைப் பற்றி எண்ணியது கூட இல்லை.

காதலி: என்னைக் காதலிக்கிறாயா?

காதலன்: ம்ம்.. ரொம்ப.. ரொம்ப..

காதலி: எப்போதாவது என்னை ஏமாற்றியுள்ளாயா?

காதலன்: இல்லை. ஏன் அதையே எப்போதும் கேட்கிறாய்?

காதலி: என்னை முத்தமிடுவாயா?

காதலன்: வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்.

காதலி: என்னை அடிப்பாயா?

காதலன்: என்ன விளையாட்டு இது? நான் அப்படிப்பட்டவன் இல்லை

காதலி: உன்னை நான் நம்பலாமா?

காதலன்: நிச்சயமாய்.

காதலி: எனக்காக எப்போதும் சில நிமிடம் செலவழிப்பாய் என நினைக்கிறேன்.

திருமணத்திற்கு பின், காதலருக்கிடையேயான உரையாடல்:

மேலே உள்ள உரையாடலை கீழிருந்து மேலே படிக்கவும்.

*****************
வாத்தியார் : எங்கே முட்டாள்களெல்லாம் எழுந்து நில்லுங்க!
சிறிது நேரம்வரை யாரும் எழுந்திருக்கவில்லை. பின்பு ஒருவன் மட்டும் தயங்கி தயங்கி எழுந்து நிற்கிறான்.
வாத்தியார் : (எல்லோரும் ஏளனமாக சிரிக்கின்றனர்!) நீ முட்டாள் என்று எப்படித் தெரியும்?
மாணவன் : அதெல்லாம் ஒன்றும் இல்லை! நீங்கள் தனியாக நிற்கிறீர்களே, அதனால்தான்!

*************

பார்த்திபன் : இந்த செல்போன்ல எந்த கார்டு வேணாலும் போடமுடியுமா?

வடிவேலு : ஓ! முடியுமே..

பார்த்திபன் : இந்த ரேஷன் கார்டைப் போட முடியுமா?

வடிவேலு : உஷ்ஷ்..! முடியல... !

***********

பீலிங்ஸ் ஆஃப் இந்தியன்ஸ்

ரமேஷ் : என்னைக் கடிச்ச கொசுவைப் பிடிச்சேன். அப்புறம் கொல்லாம பறக்க விட்டுட்டேன்.
சுரேஷ் : ஏண்டா?
ரமேஷ் : பயபுள்ள.. அது உடம்புல(!) இருக்கறது நம்ம ரத்தமாச்சேடா! அந்தப் பாசம்தான்.

****

கணக்கு டீச்சர்: உங்க அம்மாவை மம்'னு கூப்பிடற நீ, உங்க பெரியம்மா சின்னம்மா வை எப்படி கூப்பிடுவ?

மாணவன்: minimum, maximum nu கூப்பிடுவேன்..

டீச்சர்: ??!

***********
டீச்சர்: உண்மையான தமிழன் யாரு....?

மாணவன்: இங்கிலீஷ் பரீச்சையில் பெயில் ஆகுறவன் சார்..

*************************

அப்போ எனக்கு ஆறு வயசு, நான் முதல் வகுப்பில் படித்தபோது ஒரு ஆசிரியர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.
டீச்சர்: நான் உன்னிடம் நான்கு ஆப்பிள் தருகிறேன். அதை எப்படி நீ ஐந்து பேருக்கு பிரித்து கொடுப்பாய்?

நான்: எனக்கு வேண்டாம் மிஸ், அவங்க நாலு பேருக்கும் கொடுங்க.

கதை: அப்போ இருந்தே நான் ரொம்ப நல்லவன். இப்படிக்கு நல்லவன்.

**********

ரஜினியின் ரோபோட் கதை:

ஒரு பொண்ண லவ் பண்ண ரோபோட் ஆ இருந்தாலும் சாவுதான்.

*********

மச்சி அனுஷ்கா ப்ரெக்னன்ட் ஆ இருக்கா.. அதனால எல்லா மீடியா வும் என்னை தேடிகிட்டு இருக்கு. அதனால நான் அமெரிக்காவுக்கு எஸ்கேப் ஆயிட்டேன். நீயும் எஸ்கேப் ஆயிடு. ஏன்னா அனுஷ்கா வோட நாய் ப்ரெக்னன்ட் ஆ இருக்கு.
கில்லாடி மச்சி நீ.

*******

இனிமே யாரவது அந்த சங்கம் இந்த சங்கம்னு சொல்லி மெசேஜ் அனுப்புனீங்க ராஸ்கல் பிச்சி போடுவேன் பிச்சி..

இப்படிக்கு,
சங்கங்களை ஒழிப்போர் சங்கம்.
********

எலக்ஷன் பாட்டு:
கருணாநிதி: கோடம்பாக்கம் ஏரியா... வோட்டு போட வாரியா... என் கூட போட்டி போட நீ ரெடியா...

அம்மா: நீ டுபாக்குரு ஆளுடா ..மொள்ளமாரி நாய்டா.. என்கிட்ட போட்டிபோட நீ யாரு டா...

கருணாநிதி: அடியே... அடியே.... நீ யாருகிட்ட மோதி புட்ட கேட்டு பாருடி....

அம்மா: கெழவா.. கெழவாவா.... நான் எம்.ஜி.ஆர். ஜோடி தான் கேட்டு பாருடா...
**********

யாரும் தவறாக என்ன வேண்டாம். இவை சற்று ஒரு நகைச்சுவைதான்... தவறு இருந்தால் மன்னிக்கவும்.

நகைச்சுவை பிடித்திருந்தால் தங்கள் கருத்துக்களை பகிரவும்....

Saturday, October 2, 2010

பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு!


பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. ஏதேனும் சக தோழியைக் கண்டால் உற்சாகமான உரையாடலை சட்டென ஆரம்பித்து விடுகிறார்கள். கடைவீதி, அலுவலகம், ஆலயம் ஏன் சுட்டெரிக்கும் தார் ரோடு என்றால் கூட இந்த உரையாடல் தடைபடுவதில்லை.

நலமா எனத் தொடங்கும் உரையாடல் குழந்தைகள், வீடு, வேலை, மாமியார், நண்பர்கள் என கிளை விட்டுப் பரந்து விரிந்து பொழுது போவதை அறியாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

பெண்களின் உரையாடல் பெரும்பாலும் வறட்டு உரையாடலாய் இருப்பதில்லை. சிரிப்பும், கேலியும், கிண்டலும், உற்சாகமும் என உலகத்தின் மிக முக்கியமான பணி உரையாடல் என்பது போல அவர்கள் அதில் ஒன்றி விடுவார்கள்.

ஆண்கள் பலருக்கும் இந்த கலை வாய்ப்பதில்லை. "நலமா ?" என ஆரம்பிக்கும் உரையாடல் "நல்லா இருக்கேன்" என்ற பதிலைக் கேட்டபின் எப்படித் தொடர்வது என தெரியாமல் நொண்டியடிக்கும்.

அதனால் எழுகின்ற பொறாமையோ என்னவோ " இந்தப் பெண்களே இப்படித்தான், யாரையாவது பார்த்தால் போதும் மணிக்கணக்காய் பேச ஆரம்பித்து விடுவார்கள்" என ஆண்கள் அடிக்கடி அலுத்துக் கொள்கிறார்கள்.

இப்படி மனம் விட்டு உரையாடுவதும், நண்பர்களுடன் பேசி மகிழ்வதும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது எனும் புதிய ஆராய்ச்சி ஒன்றை மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டு கதை பேசும் பெண்களின் மனதில் இன்னும் கொஞ்சம் இன்பத்துப் பால் வார்த்திருக்கிறார்கள்.

மனித உடலிலுள்ள புரோகெஸ்ட்ரோன் எனும் ஹார்மோன் மன அழுத்தத்தையும், கவலை, பதட்டம் போன்றவற்றையும் குறைக்கக்கூடிய தன்மை உடையது. மனம் விட்டுப் பேசி சிரித்து உரையாடும் பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் அதிக அளவில் இருப்பதாகவும், இதுவே பெண்களின் மன மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தருவதாகவும் அவர்கள் மருத்துவ விளக்கமும் அளிக்கின்றனர்.

இத்தகைய உரையாடல்கள் வெறுமனே பொழுது போக்காக மட்டும் அமைந்து விடாமல் பெண்களுடைய நட்பு இறுக்கத்துக்கும், உதவும் மனப்பான்மைக்கும் கூட துணை செய்கிறதாம்.

ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் தொலைக்காட்சித் தொடர்களில் மாலை நேரம் முழுவதும் செலவிடும் பெண்களுக்கு உரையாடலுக்காய் செலவழிக்கும் நேரம் குறைந்து கொண்டே வருகிறது என்பது கண் கூடு. அத்தகைய சற்றும் பயன் தராத தொலைக்காட்சித் தொடர்களை விலக்கி விட்டு ஆரோக்கியமான உரையாடலுக்குப் பெண்கள் திரும்ப இந்த ஆராய்ச்சி அழைப்பு விடுக்கிறது.

Thursday, September 30, 2010

அயோத்தி நிலத்தை 3 ஆக பிரித்து ராமர் கோவில் கமிட்டி, பாபர் மசூதி கமிட்டி, அகராவிடம் வழங்க உத்தரவு


லக்னெள: அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை ராமர் கோவில் கட்டுவதற்கு இந்துக்களிடமும், இன்னொரு இடத்தை அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவிடமும், மற்றும் இன்னொரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்றும்,

இதில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.

நீதிபதிகள் தரம்வீர் சிங் சர்மா, சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியது.

ஆனால், ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனியே வெவ்வேறு தீர்ப்பை வழங்கினர். மொத்தத்தில் அவர்கள் அளித்த தீர்ப்பின்படி நிலத்தை 3 மாதத்துக்குள் மூன்றாகப் பிரித்து கோவில் கட்டிக் கொள்ள இந்து அமைப்பிடமும், இன்னொரு பகுதியை அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோலி அகராவிடமும் மற்றும் இன்னொரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மொத்த நிலத்தையும் தங்களிடம் தர வேண்டும் என்ற சன்னி முஸ்லீம் வக்பு வாரியத்தின் கோரிக்கையை நீதிபதிகளும் ஒட்டு மொத்தமாக நிராகரித்துவிட்டனர்.

இதன் மூலம் பாபர் மசூதி இருந்த இடமான 2,400 சதுர அடி நிலம் மூன்றாகப் பிரிக்கப்படும். இதைப் பிரித்து மூவரிடம் வழங்கும் வரை இப்போது இருக்கும் நிலையே, அதாவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், அந்த இடத்திலிருந்து ராமர் சிலை அகற்றக் கூடாது என்றும் தீர்ப்பளித்தனர்.

இதில் மசூதியின் மையப் பகுதி அமைந்திருந்த இடத்துக்குக் கீழே உள்ள இடம் ராமர் பிறந்த இடம் என்பதால், அந்த இடத்தில் கோவில் கட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், (இந்த நிலத்துக்கு உரிமை கோரிய இந்து அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து அறக்கட்டளை அமைத்து இந்த நிலத்தைப் பெற்று கோவில் கட்டிக் கொள்ளலாம்)

மீதமுள்ள இடத்தை அங்கு ஏற்கனவே சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவிடமும், பாபர் மசூதி கமிட்டியிடமும் பிரித்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதி சுதிர் அகர்வால் தனது தீர்ப்பில், இந்த மசூதி கட்டப்பட்ட இடத்தில் கோவில் இருந்துள்ளது என்பதை இந்திய தொல்லியல் துறையின் ஆய்வு நிரூபித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டுவதை இஸ்லாம் மதமே தவறு என்கிறது என்றார்.

நீதிபதி சிப்கத் உல்லா கான் தனது தீர்ப்பில், கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. அந்த இடத்தில் கோவில் இருந்து அது நெடுங்காலமாக சிதிலமடைந்து கிடந்தது. கோவில் முழுவதும் சிதிலமடைந்த பி்ன்னரே அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது. இடிந்து கிடந்த கோவிலின் சில கட்டுமானப் பொருட்களும் மசூதி கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

இவ்வாறு தனித்தனியே நீதிபதிகள் கருத்துத் தெரிவி்த்தாலும் மூவரும் மொத்தத்தில் அளித்த தீர்ப்பின்படி, இந்த இடத்தில் 3ல் 2 பங்கை இந்துக்களிடமும் (ராமர் கோவில் கட்டவும், நிர்மோகி அகராவிடமும்), 1 பங்கு இடத்தை பாபர் மசூதி கமிட்டியிடமும் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.

இந்த இடத்துக்கு உரிமை கோரி ராம ஜென்மபூமி நியாஸ், நிமோலி அகரா ஆகியவை 1950களில் வழக்குத் தொடர்ந்தன. 1961ம் ஆண்டில் சன்னி முஸ்லீம் வக்பு வாரியம் ஆகியவை வழக்குத் தொடர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு கடந்த 60 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்தத் தீர்ப்பையொட்டி நாடே பெரும் பரபரப்பில் ஆழ்ந்திருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து எந்தத் தரப்பும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, September 25, 2010

வைரஸை தடுக்க புதிய வழி2001-ம் ஆண்டு கோட் ரெட் என்ற வைரஸ் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கணினிகளை 14 மணி நேரத்தில் கெடுத்துக் குட்டிச்சுவராக்கியது. தவிரவும் 2.6 பில்லியன் டாலர் அளவுக்கு உலகம் முழுதும் இழப்பை ஏற்படுத்தியது.

தற்போது ஓஹியோ மாகாண தொழில் நுட்ப வல்லுனர்கள் கோட் ரெட் வகை வைரஸ்களை தடுக்க புதிய உத்திகளை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வைரசை அதன் துவக்க இயக்கத்திலேயே கண்டுபிடித்து விடுவது, அது பல நெட்வொர்க்குகளுக்கு செல்வதற்கு முன்னரே கண்டுபிடித்து விடுவது என்பதே அந்த உத்திகள்.

இந்த வைரஸ்கள் மிக வேகமாக பரவக்கூடியது. ஜன்க் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி நெட்வொர்க்கில் இவை வந்து குவியும் தன்மையுடையது. மேலும் கணினி நெட்வொர்க்கை நிரப்பி அதனை ஷட் டவுனும் செய்து விடும் ஆபத்து மிக்கவை இந்த வைரஸ்.

நெட்வொர்க்குகளில் உள்ள கணினியிலிருந்து எவ்வளவு எண்ணிக்கை ஸ்கேன்கள் வெளியில் செல்கின்றன என்பதை கண்காணிக்கும் மென்பொருளை ஓஹியோ பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். ஒரு கணினி அளவுக்கதிகமாக ஸ்கேன்களை வெளியே அனுப்பினால் அந்த கண்னி வைரஸ் தாக்குதல் கண்டுள்ளது என்று அடையாளம் காணப்படும். உடனடியாக கணினி நிர்வாகிகள் அதனை ஆஃப் லைனிற்கு எடுத்துச் சென்று வைரசை கண்காணிக்கலாம்.

கூகிளில் நாம் தேடுதல் போல்தான் இந்த ஸ்கேனை கண்டுபிடிக்கும் முறையும் என்று கூறுகிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.

வித்தியாசம் என்னவெனில் ஒரு வைரஸ் தாக்கிய கணினியிலிருந்து குறைந்த நேரத்தில் அளவுக்கு அதிகமான ஸ்கேன்கள் வெளியேறும். ஆனால் எவ்வளவு ஸ்கேன்கள் என்ற அளவை தீர்மானிப்பது கடினம்.

இதற்காக கணித மாதிரிகளையும் ஓஹியோ ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் ஒரு நேரத்தில் எவ்வளவு ஸ்கேன்கள் செல்லலாம் என்பதை இது வரையறுத்து விடும்.

இதுவரை வந்துள்ள வைரஸ் ஒழிப்பு தொழில் நுட்பங்களை விட இது திறம்பட வேலை செய்யும் என்று இந்த ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கணினி தொழில்நுட்பத்தில் ஒரு குட்டிக் கதை


கணினி தொழில்நுட்பம், நிரல் (Programme) உருவாக்குதல் குறித்து சுவையான குட்டிக் கதைகள் உள்ளன. ஜென் கதைகளின் பாணியில் இருக்கும் இவை ஜெஃப்ரி ஜேம்ஸ் எழுதிய "தி தாவோ ஆஃப் புரோகிராமிங்" என்ற தொகுப்பில் இருக்கின்றன.

மானேஜரைக் காப்பாற்றிய புரோகிராமர்

ஒரு கம்பெனியில் ஒரு மானேஜரை வேலை விட்டுத் தூக்குவது என்று முடிவெடுத்தார்கள். ஆனால் அவருக்குக் கீழே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு புரோகிராமர் புதிதாக ஒரு புரோகிராமை எழுதினார். அந்த புரோகிராம் பிரபலமடைந்து நிறைய விற்பனை ஆனது. எனவே இதன் விளைவாக அந்த மானேஜரின் தலை தப்பித்தது.

மானேஜர் அந்த புரோகிராமருக்கு போனஸ் கொடுக்க முயற்சி செய்தார். புரோகிராமர் வாங்க மறுத்துவிட்டார். "சுவாரஸ்யமான கான்செப்ட்டாக இருக்கிறதே என்றுதான் அந்த புரோகிராமை எழுதினேன். எனவே நான் ஒரு சன்மானத்தையும் எதிர்பார்க்கவில்லை" என்றார் புரோகிராமர்.

இதைக் கேட்ட மானேஜர், "இந்த புரோகிராமர் அற்பமான பதவியில் இருந்தாலும் ஒரு ஊழியனின் கடமையை ஒழுங்காகப் புரிந்து வைத்திருக்கிறான். இவனை மானேஜ்மென்ட் கன்சல்டன்ட் என்கிற மகத்தான பதவிக்கு உயர்த்துவோம்" என்றார்.

மானேஜர் புரோகிராமரிடம் இதைச் சொன்னபோது அவர் மீண்டும் மறுத்து இப்படிச் சொன்னார் : "நான் புரோகிராமிங் செய்வதற்காகத்தான் உயிர் வாழ்கிறேன். எனக்குப் பதவி உயர்வு கொடுத்துவிட்டால் நான் மற்றவர்கள் நேரத்தை வீணாக்குவதைத் தவிர உருப்படியாக வேறெதுவும் செய்ய மாட்டேன். சரி, நான் போகலாமா? நான் ஒரு புரோகிராம் எழுதிக் கொண்டிருக்கிறேன்."

வேலை நேரம்

ஒரு மானேஜர் தன் புரோகிராமர்களிடம் சொன்னார் : "உங்கள் வேலை நேரத்தைப் பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும். இனிமேல் நீங்கள் காலை ஒன்பது மணிக்கு வந்து மாலை ஐந்து மணிக்குக் கிளம்ப வேண்டும்." எல்லா புரோகிராமர்களும் இதைக் கேட்டு கடுப்பானர்கள். அவர்களில் பலர் உடனே ராஜினாமா செய்தார்கள்.

எனவே அந்த மானேஜர் சொன்னார் : "ஓ.கே., அப்படியென்றால் உங்கள் வேலை நேரத்தை நீங்களே நிர்ணயித்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் ப்ராஜெக்ட்களை நேரத்தில் முடித்துவிட வேண்டும்." இந்த ஏற்பாட்டில் திருப்தி அடைந்த புரோகிராமர்கள், பகலில் வந்து அடுத்த நாள் அதிகாலை வரை வேலை செய்யத் தொடங்கினார்கள்.

ஒரு ப்ராஜெக்ட்டை முடிக்க ஆகும் நேரம்

ஒரு மானேஜர் ஒரு டாப் புரோகிராமரிடம் போனார். ஒரு புதிய அப்ளிகேஷனை உருவாக்குவதற்கு என்னென்ன தேவை என்ற விபரங்கள் அடங்கிய டாக்குமென்ட் ஒன்றைக் காட்டினார். "இந்த சிஸ்டத்தை வடிவமைக்க ஐந்து புரோகிராமர்களை நியமித்தால் இந்த வேலை முடிய எவ்வளவு காலம் ஆகும்?" என்று டாப் புரோகிராமரைக் கேட்டார்.

"ஒரு வருடம் ஆகும்" என்று டாப் புரோகிராமர் உடனே பதிலளித்தார்.

"ஆனால் இந்த சிஸ்டத்தை நாம் உடனடியாக முடித்தாக வேண்டுமே! நான் அதற்கு 10 புரோகிராமர்களைப் போட்டால் எத்தனை நாள் ஆகும்?" என்றார் மானேஜர்.

டாப் புரோகிராமர் எரிச்சல் அடைந்தார். "அப்படியென்றால் இரண்டு வருடம் ஆகும்" என்றார்.

"100 புரோகிராமர்களை நியமித்தால்?"

டாப் புரோகிராமர் தோளைக் குலுக்கினார். "பிறகு அந்த டிசைனை செய்து முடிக்கவே முடியாது."

உண்மை எதில் இருக்கிறது?

ஒரு புரோகிராமிங் ஞானி உண்மையின் தன்மையைப் பற்றி தனது இளம் சீடர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.

"உண்மை என்பது எல்லா சாஃப்ட்வேர்களிலும் பொதிந்திருக்கிறது - அவை எவ்வளவு அற்பமானவையாக இருந்தாலும் சரி" என்றார் ஞானி.

"உண்மை கையடக்க கால்குலேட்டரில் இருக்கிறதா?" என்றான் ஒரு சீடன்.

"இருக்கிறது" என்றார் ஞானி.

"உண்மை ஒரு வீடியோ கேமில் இருக்க முடியுமா?" என்றான் அந்த சீடன்.

"அது வீடியோ கேமிலும் இருக்கிறது" என்றார் ஞானி.

"உண்மை கம்ப்யூட்டரில் இருக்கும் chip-ல் இருக்கிறதா?"

இதைக் கேட்ட ஞானி செருமிக்கொண்டார், லேசாக நெளிந்தார். பிறகு சொன்னார் : "இன்றைய பாடம் முடிந்தது."

பெரிய கம்பெனி

ஒரு சீடன் தனது புரோகிராமிங் குருவைக் கேட்டான் : "ஒரு கம்பெனி மற்ற கம்பெனிகளை விட மிகப் பெரிதாக இருக்கிறது. குள்ளர்களுக்கு இடையில் ஒரு ராட்சஸன் போல் அது தனக்குப் போட்டியான நிறுவனங்களை விட மிகவும் உயர்ந்திருக்கிறது. அதன் பிரிவுகளில் ஒன்றை எடுத்துக் கொண்டால் கூட அந்த ஒரு பிரிவே தனி கம்பெனியாக இயங்கலாம். இது எப்படி நடக்கிறது?"

குரு பதில் சொன்னார் : "ஏன் இப்படி முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்கிறாய்? அந்த கம்பெனி ரொம்பப் பெரிதாக இருப்பதால் பெரிதாக இருக்கிறது, அவ்வளவுதான். அது ஹார்டுவேரை மட்டும் தயாரித்தால் யாரும் அதை வாங்க மாட்டார்கள். அது சிஸ்டம் மெயின்டெனன்ஸ் மட்டும் செய்தால் மக்கள் அந்த கம்பெனியை ஒரு வேலைக்காரனைப் போல் நடத்துவார்கள். ஆனால் அது இந்த எல்லா விஷயங்களையும் சேர்த்து செய்வதால் மக்கள் அதைக் கடவுளைப் போல் நினைக்கிறார்கள்! அது போராட முயற்சி செய்யவில்லை. எனவே அது பிரயத்தனம் இல்லாமலே ஜெயிக்கிறது."

பதிவு பிடித்திருந்தால் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் நன்றி.

Sunday, September 19, 2010

செப்டம்பர் 30ல் கூகுள் வேவ்கூகுள் வேவ் குறித்து கம்ப்யூட்டர் மலரில் வந்த தகவல்கள் உங்கள் மனதில் இன்னும் இருக்கும் என எண்ணுகிறேன். சென்ற மே மாதம் நடைபெற்ற உலகளாவிய கருத்தரங்கில் இது குறித்த அறிவிப்பினை கூகுள் முதல் முதலில் வெளியிட்டது. ஆனால் அதனை அடுத்து மைக்ரோசாப்ட் தன் பிங் (Bing) சேவை குறித்து செய்திகள் வெளியிட்டு
டிஜிட்டல் மீடியா கவனத்தைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டது.

கூகுள் மே மாதம் அறிவித்த போது இது கூகுள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி சாதனையாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. தற்போதைய ஜிமெயிலின் ஒரு எக்ஸ்டென்ஷனாகத்தான் இது இருக்கும் என அனைவரும் எண்ணினார்கள். இதன் மூலம் பயனாளர்கள் இமேஜஸ், வீடியோ மற்றும் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளலாம் என்றும் பலர் ஒரே நேரத்தில் எளிதாகத் தங்களுக்குள் உரையாடலை நடத்திக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 30ல் இந்த சேவை பொதுமக்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது. ஏற்கனவே 6000 டெவலப்பர்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு அவர்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி இதனை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தந்து வருகின்றனர். அடுத்து பொது மக்களில் ஒரு லட்சம் பேரைத் தேர்ந்தெடுத்து சிக்கள்கள் மற்றும் பிரச்சினைகளைக் கேட்க கூகுள் முடிவு எடுத்துள்ளது. இவர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று இன்னும் கூகுள் அறிவிக்கவில்லை. இது குறித்து தொடர்ந்து தகவல் பெற http://wave.google.com என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.

படைப்பு பிடித்திருந்தால் மறக்காம ஒட்டு போடுங்க....

Tuesday, September 14, 2010

ஃபேஸ்புக்கின் புதிய பாதுகாப்பு அமைப்பு ....நியூயார்க்: தனது பயனீட்டாளர்களுக்கு, புதிய, கணக்கு பாதுகாப்பு அமைப்பினை ஃபேஸ்புக் இணையதளம் அறிமுகப் படுத்த உள்ளது.

ஃபேஸ்புக் இணையதளம் நாளுக்கு நாள் இளைஞர்களிடையே புகழடைந்து வருகிறது. ஆனால், மற்றொருவரின் கடவுச்சொல்லை தெரிந்துக் கொண்டு, அவர்ளது ஃபேஸ்புக் கணக்கில் அத்துமீறி நுழையும் விஷமிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. இதனைக் கருத்தில் கொண்டு புதிய, கணக்கு பாதுகாப்பு அமைப்பு ஒன்றினை ஃபேஸ்புக் இணையதளம் அறிமுகப் படுத்தப் போகிறது.

அதன் மூலம், தனது ஃபேஸ்புக் கணக்குக்குள், வேறு யாராவது நுழைந்துள்ளார்களா என்பதை, எங்கிருந்து வேண்டுமென்றாலும் அறிந்துக் கொள்ளலாம்.

இதனை செய்ய, ஃபேஸ்புக் கணக்குக்குள் நுழைந்து, கணக்கு (Accounts) என்ற சுட்டியை சொடுக்க வேண்டும். பின்னர், கணக்கு அமைப்புகள் (Account Settings) என்ற சுட்டியை சொடுக்க வேண்டும். அதில் கணக்கு பாதுகாப்பு (Account Security) என்ற சுட்டியை சொடுக்கினால், அந்தக் குறிப்பிட்ட ஃபேஸ்புக் கணக்குக்குள் வேறு யாரெல்லாம் நுழைந்துள்ளார்கள், எந்த கருவியின் மூலம் நுழைந்துள்ளனர், எந்த ஊரில் இருந்து ஃபேஸ்புக் கணக்குக்குள் பிரவேசித்துள்ளனர் என்ற விவரங்கள் தெரிந்து விடும்.

ஒரு வேளை, அவ்வாறு எவரேனும் அத்துமீறி நம் ஃபேஸ்புக் கணக்குக்குள் நுழைந்திருந்தால், அவர்கள் பற்றிய விவரங்கள் ஒளிரும் இடத்திற்கு அருகிலேயே இருக்கும், 'பணியை முடி' (End Activity) என்ற பொத்தானை சொடுக்கி, அழையா விருந்தாளிகளை வெளியேற்றலாம்.

பின்னர், மறக்காமல் நம் கடவுச்சொல்லை மாற்ற வேண்டும்.

ஃபேஸ்புக்கின் இந்த புதிய, பாதுகாப்பு அமைப்பு ஓரிரு வாரங்களில் அறிமுகப் படுத்தப் பட உள்ளது.

Sunday, September 12, 2010

நகைச்சுவை பயங்கரம்...!!

‌சி‌‌ல்லறை ...

அய்யா தர்மம் பண்ணுங்க அய்யா! இல்லப்பா... சில்லறை இல்லையே... ஏன் சாமி எப்பவும் இப்படி சில்லறையாவே யோசிக்கிறீங்க!...

முதல் நாளே ...

என்ன டைரக்டர் சார் உங்க படத்துக்கு முதல் நாளே இவ்வளவு அடிதடி? அப்படியா அப்ப படம் ஹிட்! மண்ணாங்கட்டி! முதல் சீன் முடிஞ்ச உடனே அவ்வளவு பேரும் உடனே தியேட்டரை விட்டு வெளியே போகணும்னு முண்டியடிச்சா அடிதடி வராதா!...

காத‌ல் - க‌ல்யாண‌ம்

இவ்வளவு நாள் காதலிச்சும் என்ன நீ ஒரு மூணாவது மனுஷனாத்தான் நினைச்சுகிட்டு இருந்த இல்ல?

என்ன சொல்றீங்க?


உனக்கு கல்யாணம் ஆன விவரத்தை நான் உங்க அப்பா மூலமாத்தான் தெரிஞ்சுக்கணுமா?

ப‌ி‌ச்சை‌க்கார‌ன்..

கைகாலெல்லாம் நல்லாத்தான இருக்கு! ஏன் இப்படி வீடு வீடா அலஞ்சு பிச்சை எடுக்கற?

ரொம்ப நன்றி சாமி! எனக்கு புத்தி புகட்டினீங்க! இனிமே அலையாம ஒரே இடத்துல உட்கார்ந்து பிச்சை எடுக்கறேன் சாமி

வேலைக்காரி

இந்த வேலைக்காரி செஞ்ச காரியத்தால வீடே நாறிப் போச்சு அப்டி என்னதான் செஞ்சா?
திடீர்னு வேலைய விட்டு நின்னுட்டா....

நாய் இரவல்
கணவன் : என்னது? பக்கத்து வீட்டு கமலா நம்ம வீட்டு நாயை இரவல் கேக்கறாளா? என்ன விஷயமாம்?
மனைவி : போன வருஷம் இதே நாள்லதான் நம்ம நாய் உங்க அம்மாவை கடிச்சிது, அவங்க அதுக்கப்புறம் நம்ம வீட்டு பக்கம் தலை வச்சுக் கூட படுக்கவே இல்லையாம் . . . அதான்!...

ஆட்டுக்கால் :
வீட்டுக்காரன் : என்னடா இது வெறும் ஆட்டுக்கால் மட்டும் வாங்கிட்டு வர்ற?
வேலைக்காரன் : நீங்க தந்த 10 ரூபாய்க்கு பின்ன என்ன ஆட்டுக்கால்ல தங்க கொலுசு மாட்டியா தருவாங்க....

Friday, September 10, 2010

ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!

ஒரு விடுமுறை நாளின்
மதிய நேரத் தூக்கத்தில்
சென்னிறப் புரவியில்
வெண்ணிற ஆடை அணிந்த
ஒரு தேவதை வந்தாள்
மெல்ல என் கரம் பற்றி
வா என்றாள்,
எங்கே என்றேன்,
சொன்னால்தான் வருவாயோ?-என்றாள்,
சற்றைக்கெல்லாம்
அவளைப் பின் தொடர்ந்தேன்
மலர்களால் நிறைந்த
ஒரு வனத்தின் நடுவே
மஞ்சை பஞ்சாக்கி
அமைத்த ஒரு மஞ்சத்தில்
என்னை இருத்தினாள்
எதற்காக என்னை
இங்கே அழைத்து வந்தாய்-என்றேன்,
இன்னுமாப் புரியவில்லை என்றாள்,
அப்பொழுதான் கவனித்தேன்
அந்த காமம் வழியும் கண்களையும்,
விரகத்தில் தவித்த உதடுகளையும்,
இனியும் என்ன தாமதம் என்று
தாவி அணைக்க முயல்கயில்,
அலறியது என் கைபேசி
திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன்
அலுவலக நண்பனின்
ஜாவா சந்தேகம்
சந்தேகம் தீர்த்து முடிக்கையில்
மீண்டும் கனவின் நினைவு வர
விட்ட இடத்திலிருந்துக்
கனவைத் தொடர முயற்சித்தேன்
முடியவில்லை
என் கனவும் கூட என்னிடம்
கடவுச்சொல் கேட்டது!!!!

Tuesday, September 7, 2010

நானும் ஒரு சாகசக்காரன்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி
உள்ளங்களைக் கவரும் சூத்திரம் தெரியாத
ஏமாளிக் கூட்டத்தில் நானும் ஒருவன்!!!

சிரித்தப் பகல்களை விட அழுத இரவுகள்
எண்ணிக்கையில் அதிகம் என் வாழ்வில்!!!!

இருந்தும்,

பகுத்தறிவின் உச்சக்கட்டத்தில்
சிந்தித்துக் கொண்டிருக்கும்,
நானும் ஒரு சாகசக்காரன் தான்,,
எடுத்துக்கொண்ட நம்பிக்கையில், முயற்சியில்,
தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளத்
தயங்காத சாகசக்காரன்!!!

உங்களுள் மறைக்கப்பட்ட காரியத்தின்னமான எண்ணமும்,
என்னால் வெளிப்பட்ட வீரியம் குறைந்த எண்ணமும் தான்.....
இந்தியாவின் முன்னேற்றத்திற்க்குத் தடை என்றால்
அது மிகையாகாது!!!

மாதா, பிதா, குரு, தெய்வம். என்கிற அறுந்துப்போன
வாக்கியத்தில் அறவே நம்பிக்கை இல்லை!!!!!!!
கடைசி உறவைப் போல் முதல் மூன்று உறவும்
புரியாதப் புதிராய் போகும் அவலநிலையும் உண்டு!!!

காது கேளாதவனுக்கு நிசப்தமும் நல்லிசையே,
கண் தெரியாதவனக்கு ஞாயிறும் திங்களே!!

Sunday, September 5, 2010

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு.
ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லாதூங்கிட்டுருக்கும்போது
வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒருதிருடன் வந்துட்டான்.
சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல்நல்ல உறக்கத்திலிருக்க,
திருடனைப்பார்த்த நாய் குரைக்காமல்கம்முன்னு இருந்துச்சு.

சரியா சோறே போடறதில்லை,
இவனுக்கு நாம ஏன் உதவிபண்ணனும்னு நாய் குரைக்கவில்லை.
அதைப்பார்த்த கழுதைஎன்னடா இவன் கம்முன்னு இருக்கான்,
குரைச்சு முதலாளியைஎழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான்,
சரி நாமளாவது சத்தம்போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னுகத்த ஆரம்பிச்சுது.
சத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான்.
சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி
ஒருகட்டையை எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி.
கூறுகெட்டகழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கேன்னு கழுதையைதிட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.

நீதி : ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோஅதைமட்டும்தான் செய்யனும் ஓவரா சீன் போட்டாஇப்படித்தான்.

இந்தக்கதை மற்றொரு கோணத்தில்...

கழுதை கத்தியதும் எழுந்த சலவைத்தொழிலாளி,
கழுதை சும்மாகத்தியிருக்காது காரணாமாகத்தான் கத்தியிருக்கும்
என்று எழுந்துபார்த்து திருடன் வீட்டுக்கு
வந்ததால்தான் கழுதை கத்தியதுஎனப்புரிந்துக்கொண்டான்.
அடுத்த நாள் கழுதைக்கு வகைவகையானசாப்பாடு போட்டான்.
நாயைக்கண்டுகொள்ளவே இல்லை.

கழுதையோட ஆர்வக்கோளாறும், விசுவாசமும் முதலாளிக்குபிடித்துவிட
இவன் ரொம்ப நல்லவன்டா எவ்ளோ வேலைகொடுத்தாலும் செய்யிறான்னு முதலாளியின் எல்லாவேலைகளையும் கழுதையை செய்ய வைத்தான்.
நாய்செய்துக்கொண்டிருந்த வேலையும் கழுதையின் மேல்சுமத்தப்பட்டது.
நாய் சுகமாக வேலையே செய்யாமல் கழுதையைபார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. வேலை செய்து அலுத்துப்போனகழுதை இப்போது வேறு வேலைக்கு சிவி அனுப்பிகிட்டிருக்கு...

நீதி:ஆபிஸ்ல ஓவரா சீன்போட்டா இப்படியும் நடக்கலாம்

முல்லா கதைகள்

முல்லா ஒரு கழுதையை மிகச் செல்லமாக வளர்த்து வந்தார். அது ஒரு நாள் வெளியே மேயும் போது காணாமல் போய்விட்டது. கழுதை காணாமல் போன தகவலை பதறியடித்துக்கொண்டு முல்லாவிடம் சொல்லிய ஊர்க்காரர்களிடம் முல்லா, ‘‘அப்பாடா... ரொம்ப நல்லதாய்ப் போனது’’ என்றார். ‘‘உங்கள் கழுதை காணாமல் போய் விட்டதென்கிறோம்.. எப்படி அதை நல்லதென்கிறீர்கள்?’’ என்று கேட்டனர். முல்லா, ‘‘நான் அதன்மேல் சவாரி போயிருந்தால் நானும் அதனுடன் காணாமல் போயிருப்பேன்... நல்லவேளை’’ என்றாராம்.

ஒரு நாள் முல்லாவின் பக்கத்து வீட்டுக்காரர், முல்லாவை அழைத்து, ‘‘உங்கள் கழுதையை இரவல் தர முடியுமா?’’ என்று கேட்டார்.முல்லா, ‘‘முடியாததற்கு வருந்துகிறேன். ஏற்கெனவே கழுதையை வாடகைக்கு விட்டு விட்டேன்’’ என்றார்.முல்லா பக்கத்து வீட்டுக்காரரிடம் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது முல்லாவின் பின் தொழுவத்திலிருந்து கழுதையின் கனைப்பு கேட்கத் தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம், ‘‘கழுதை அங்கிருந்து சத்தமிடுகிறதே முல்லா’’ என்றார். உடனே கோபத்துடன், ‘‘என் வார்த்தையை விட கழுதையின் வார்த்தைதான் உனக்கு முக்கியம்... உனக்கு வெட்கமாய் இல்லை’’ என்றார் முல்லா.

ஒரு ராஜா முல்லாவை தன் அரண்மனைக்கு ஒரு நாள் விருந்துண்ண அழைத்தார். அரசனின் சமையல்காரர் சமைத்த முட்டைக்கோஸ் கறி எல்லாவற்றையும் விட பிரத்யேக சிறப்புடன் சமைக்கப்பட்டிருந்தது. விருந்துக்குப் பிறகு ராஜா முல்லாவிடம் ‘‘முட்டைக்கோஸ் கறி எப்படி இருந்தது?’’ என்றார். முல்லா, ராஜாவிடம் ‘‘மிக ருசியாக இருந்தது’’ என்றார். ராஜா, ‘‘மறக்க இயலாத சுவையென்று நான் நினைத்தேன்’’ என்றார்.

முல்லா கூடுதலாகவே, ‘‘நீங்கள் சொல்வது சரிதான்... தின்னத் திகட்டாத ருசி’’ என்றார். ராஜா முல்லாவிடம், ‘‘ஆனால் நீங்கள் ருசியானது என்று மட்டுமே சொன்னீர்கள்? என்று குறிப்பிட்டுச் சொன்னார்.‘‘உண்மைதான். நான் ராஜாவுக்கு அடிமையே தவிர... முட்டைக்கோஸ§க்கு அடிமை இல்லை’’ என்று முல்லா பதிலளித்தார்.

முல்லாவின் தெருவில் குடியிருக்கும் ஒருவர் முல்லா வீட்டுக்கு வந்தார். ‘‘முல்லா, உங்கள் வீட்டுக் கொடியை எனக்கு இரவல் தரமுடியுமா?’’ என்று கேட்டார்.

முல்லா, ‘‘முடியாது’’ என்றார்.தெருக்காரர், ‘‘ஏன் முடியாதென்கிறீர்கள் முல்லா?’’ என்றார்.

முல்லா, ‘‘கொடியில் மாவு உலரப் போட்டிருக்கிறேன். தரமுடியாது’’ என்றார் முல்லா.

தெருக்காரர், ‘‘கொடியில் மாவை உலரப் போட முடியுமா?’’ என்றார்.

முல்லா, ‘‘இரவல் தருவதை விட அதுவொன்றும் சிரமமான காரியம் இல்லை’’ என்றார்.

முல்லாவின் ஊரில் ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அடித்தளத்திற்காகத் தோண்டும்போதும், கட்டுமான வேலையிலும் மண்ணும் கல்லும் பெரிய குப்பையாக தெருவில் குவிந்துவிட்டது. அந்தக் குப்பை ஊரிலுள்ள எல்லாரையும் தொந்தரவு செய்தது. ஒரு நாள் முல்லா அந்தத் தெருவுக்குள் கடப்பாறையுடன் வந்து ஒரு குழி வெட்டத் தொடங்கினார்.

‘‘முல்லா..! ஏன் திடீரென்று இங்கே வந்து குழிவெட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?’’ என்றார் பாதசாரி ஒருவர்.

‘‘மலைபோல் குவிந்திருக்கும் கட்டடக் கழிவை நான் தோண்டும் குழியில் போட்டு மூடிவிடுகிறதுதான் என் திட்டம்’’ என்றார் முல்லா.

பாதசாரி முல்லாவிடம், ‘‘அப்படியென்றால், இக்குழியை வெட்டும்போது வெளியே குவியும் மண்ணை என்ன செய்யப்போகிறீர்கள் முல்லா?’’ என்றார்.

முல்லா கோபப்பட்டு, ‘‘எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பாக முடியுமா?’’ என்றார்

உஷாரய்யா உஷாரு: தம்மை கேலி செய்வார்களோ என்ற அச்சம்

உஷாரய்யா உஷாரு: தம்மை கேலி செய்வார்களோ என்ற அச்சம்: "உலகத்தில் நமக்கு எல்லாமே புதிதுதான். அது பழகும் வரை. பிறக்கும் குழந்தைக்கு இந்த உலகமே புதிது. தாய், தந்தை, சகோதர சகோதரிகள் என அனைத்து உறவு..."

sema jokes: லவ்வைச் சொல்ல சில ஜிவ் வழிகள்!

sema jokes: லவ்வைச் சொல்ல சில ஜிவ் வழிகள்!: "அ,ஆவை தலைகீழா சொல்ல முடியுமா? 4576347 X 537.82733 = எவ்வளவுன்னு கால்குலேட்டர் இல்லாம சொல்ல முடியுமா? கந்த சஷ்டி கவசத்தை இங்கிலீஷ்ல சொல்ல ..."

Saturday, September 4, 2010

லவ்வைச் சொல்ல சில ஜிவ் வழிகள்!

அ,ஆவை தலைகீழா சொல்ல முடியுமா? 4576347 X 537.82733 = எவ்வளவுன்னு கால்குலேட்டர் இல்லாம சொல்ல முடியுமா? கந்த சஷ்டி கவசத்தை இங்கிலீஷ்ல சொல்ல முடியுமா? ‘கோலங்கள்’ சீரியல்கில்லர் என்னிக்கு முடியும்னு சொல்ல முடியுமா? ‘இது என்னவே பெரிய விசயமாக்கும், சொல்லிடலாம்’னு மல்லுக்கு நிக்கிறீங்களா! உங்க காதலை உங்க காதலிக்கிட்ட தைரியமா சொல்ல முடியுமா? என்ன தயங்குறாப்ல தெரியுது. இதுக்காகவே புதுசா ஒரு பொஸ்தகம் வந்திருக்கு. ‘லவ்வைச் சொல்ல சில ஜிவ் வழிகள்!’ இதான் அதோட டைட்டில்! இதை எழுதுனவரு பேரை அடிக்க மறந்துட்டாங்க! அட, விலையைக் கூட போடலைன்னா பாத்துக்கோங்களேன். ஆனா, இப்போ சந்தையில டான் ப்ரௌனுக்கு பொஸ்தகளுக்கு அப்புறமா இதுதான் சக்கைப்போடு போடுது! அந்த பொஸ்தகத்திலிருந்து.

லவ் @ லாஸ்ட் நிமிடம்!

உங்க காதலி என்னிக்காவது எங்கேயாவது வெளியூருக்கு கிளம்பலாம், அது என்னிக்கு, எப்படின்னு தெரிஞ்சு வைச்சுக்கோங்க. இப்ப உதாரணத்துக்கு உங்க காதலி, கும்மிடிப்பூண்டிக்கு ‘கூ குச் குச்’ வண்டியில கிளம்பலாம். இன்னும் ரெண்டே நிமிசம்தான் இருக்கு ரயிலு கெளம்ப. ‘நான் போயி தண்ணி புடிச்சிட்டு வாரேன்’னு பாட்டிலோட நீங்க எங்கியாவது தள்ளி போயி நின்னுக்கணும். ரெட்டு லைட்டு, ஆரஞ்சாகி, பச்சையா பல்லைக்காட்டும். ரயிலு நகர ஆரம்பிக்கும். நீங்க ‘ச்ச்சொப்புனாஆஆ…’ன்னு கத்திக்கிட்டே தண்ணி பாட்டிலோட அங்கேயிருந்து ஸ்டைலா ஓடி வர ஆரம்பிக்கணும். நாலு பேர் மேல மோதணும், ரெண்டு தடவ லக்கேஜ் தட்டி விழணும். நீங்க இப்படி பரபரப்பா ஓடி வர்றதை உங்க காதலி படபடப்பா பாக்கணும். ‘இந்தா புடிச்சுக்கோ’ன்னு பாட்டிலை அந்தக் கடைசி நிமிசத்துல அவ கையில கொடுக்கறப்போ, ‘ஐ லவ் யூ’ன்னு ஒரு குட்டி பேப்பர்ல (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம) எழுதிக் கொடுத்துரணும். அந்த ‘லவ் @ லாஸ்ட் நிமிட்’ல காதல் குபீர்னு பத்திக்க 99% சான்ஸ் இருக்குன்னு ‘லவ்வாயணம்’ சொல்லுது. காதலி சட்டுன்னு செயினைப் புடிச்சி இழுத்து ரயிலை நிறுத்தி இறங்கி வந்து கையை நீட்டி…. ‘நாலு அறை’ கூட விடலாம். யாரு கண்டா!

ரெமோ நமஹ!

பஸ் ஸ்டாப்ல காதலி நிக்கிறா! உங்க காதலியை விட அதிகமான முடியை நீங்க வைச்சிக்கிட்டு, 300கிலோ வெயிட் உள்ள பைக்ல ஸ்டைலா (உருட்டிட்டு போயாவது) நிக்கணும். அவ கண்ணை நேருக்கு நேரா, 90டிகிரியில பார்த்து, அவ முகத்து பக்கத்துல உங்க முகத்தை கொண்டு போயி (கண்டிப்பா பல் தேய்ச்சிருக்கணும்) ‘இருக்கு. புடிச்சிருக்கு. உன்னை. மனசை. காதலை. எல்லாம். புடிச்சிருக்கு. காதலிக்கிறேன்’னு அவளுக்கு மட்டுமாவது கேக்குற மாதிரி சொல்லணும். அவ அதிர்ந்து நிக்கிறப்போ, ‘நம்பலேல. நீ என்னை நம்பலேல..’ன்னு சொல்லிக்கிட்டே அப்படியே திரும்பாம ரெமோ ஸ்டைல்ல ரோட்டை பின்பக்கமா நடந்தே கிராஸ் பண்ணனும். (ரெட் சிக்னல் விழுந்திருக்குற நேரம் பாத்து கிராஸ் பண்ணனும். இல்லேன்னா மவனே சட்னிதான்!) இப்படியே குறைஞ்சது பதினாலு தடவையாவது செஞ்சா லவ் சிக்னல் கெடைக்க வாய்ப்பிருக்கு. இல்லாட்டி, அவளுக்கு பஸ் கிடைச்சிருக்கும், ஏறிப் போயிருப்பா!

கவிதையே தெரியுமா!

கவிப்பித்தன், காதல் அடியாள், ரொமான்ஸ்தாசன், ரோமியோநேசன் இப்படி யார்கிட்டயாவது போய் கடன் கேளுங்க. பணம் இல்லீங்க, உங்க மனசை அவகிட்ட ‘படார்’னு தொறந்து காட்டுற மாதிரி ஒரு கவிதையை செஞ்சு தர சொல்லுங்க! யாரும் கிடைக்கலியா.. கழுத, கவிதைதானே. எழுதிட்டாப் போச்சு. 5 இங்கிலீசு வார்த்தை, 4 1/2 தமிழ் வார்த்தை, 25 கிராம் மானே, மீனே போட்டு தாளிச்சு, மேலே ரெண்டு ஆச்சரியக் குறியைத் தூவி இறக்கிட்டா சுடச்சுட கவிதை ரெடி! இப்ப உதாரணத்துக்கு,

‘சன்னைத் தின்ன முடியாது – மானே
உன் கண்ணு சன்னு!
பப்ஸைத் தின்ன முடியும் – மீனே
உன் லிப்ஸ் பப்ஸ்!
ரோஸுக்கு நோஸ் கெடையாது – தேனே
உன் நோஸ் ரோஸ்!
சொப்னா!
என் எதயம் ஒரு Hard Disk!
நீ வந்துப்புட்ட -
இனி அது Heart Disk!
நீ உன் எதயம் give.
நான் என் எதயம் give.
அதுக்குப் பேருதான் லவ்வு!
இப்படி ஜிவ்வுன்னு ஒரு கவிதைய போட்டுத்தாக்கினா அதுக்குப்புறம் சான்ஸே இல்லை. அட ஆளு மயங்கிடும்பா!

50 பைசா காதல்!

டவுன் பஸ். முதல் சீட்டில் காதலி! நல்ல கூட்டம். ‘கொருக்குப்பேட்டை ஒண்ணு’ன்னு டிக்கெட்டுக்கு உங்ககிட்ட பத்துரூபாய பாஸ் பண்ணுறா! நீங்களும் கண்டக்டர்கிட்ட அந்த ‘புனித’ நோட்டை அனுப்பி விடுறீங்க! ‘50 பைசா சில்லறை வேணும்’னு கண்டக்டர் கேப்பாரு. நீங்க யோசிக்காம 50 பைசாவை கர்ணப்பிரபுவா எடுத்து நீட்டி அந்த டிக்கெட்டை எப்படியாவது காதலிக்கு வாங்கி கொடுத்துரணும். சொப்னா அவசரமா அவளோட குட்டி ஹாண்ட்பேக்ல ஒரு குகையில இருந்து 50 பைசாவை எடுத்து ‘தாங்க்ஸ்’னு நீட்டுவா! உடனே கருமம் புடிச்ச மாதிரி வாங்காம, ‘எனக்கு 50 பைசா வேண்டாம், இந்த 50 கிலோ மிராண்டா பாட்டிலோட இதயம்தான் வேணும்’ பளிச்சுன்னு ஒரு பஞ்ச் டயலாக்கை நெஞ்சுல இருந்து எடுத்து விடணும். அப்புறமென்ன, உங்களுக்கு பாலிஷ் போட பஸ்சு 50அடி தள்ளிப்போய் போலீஸ் ஸ்டேஷன்ல போய்கூட நிக்கலாம்.

போஸ்டர் விடு தூது!

காதலி நாய்க்குட்டிக்கு பொறந்த நாளா, அவ பாட்டிக்கு (12வது தடவையா) 51வது பொறந்தநாளா, அவளோட பாசத்துக்குரிய பக்கத்து வீட்டு தாத்தா மண்டையப் போட்டுட்டாரா, அவளோட பேவரிட் ஸ்டார் ஹிரித்திக் ரோஷன் படம் ரிலீஸ் ஆகுதா, உடனே நீங்க போஸ்டர் அடிச்சு ஒட்டிரணும். காதலிக்கு இன்னும் ரெண்டு மாசத்துல பொறந்தநாள் வருதா? முடிஞ்சா இப்பவே கட்-அவுட் வைச்சிருங்க! இப்படியே போய்க்கினு இருந்தா ஒரு நாள் ‘ஏன் இப்படி பண்ற?’ன்னு காதலி கேட்பா! அப்ப காதலை கண்டமேனிக்கு கொட்டிரணும். அப்பவும் உட்டுட்டா, அவ கல்யாணத்துக்கும் நீங்கதான் போஸ்டர் அடிக்கணும் மாமூ!

SMS புரட்சி!

காதலை நேரே சொல்லப்போனா உதடு ‘ஒத்துழையாமை இயக்கம்’ நடத்துதா! கவலையை விடுங்க! இருக்கவே இருக்கு செல் பேசும் வார்த்தைகள், அதாம்பா SMS. அதுலயும் ‘I LOVE YOU!’ அப்படிங்கிற வார்த்தை மொத்தமா அனுப்ப விரலு மிரளுதா? தவணை மொறையில ஒவ்வொரு எழுத்தா குழப்பி குழப்பி அனுப்புங்க. ஆனா எப்படியாவது தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு ஒரு மாசத்துக்குள்ள மொத்த எழுத்துக்களையும் அனுப்பி வைச்சுருங்க! இது ரொம்ப பாதுகாப்பான வழி. இதுல உள்ள ஒரே ஒரு சின்ன ரிஸ்க். சொப்னா மெஸேஜை ‘Y I LOVE U’ன்னு தப்பா புரிஞ்சுக்கூட வாய்ப்பிருக்கு! காதல்ல இதெல்லாம் சகஜம்பா!

ஆமா, இவ்வளவு அருமையான பொஸ்தகம் எங்க கிடைக்குதுன்னு சொல்லவே இல்லீயே வருத்தப்படாதீங்க. மொத்த பொஸ்தகமே இம்புட்டுத்தான்.
(ஒரு சின்ன திருத்தம்: பொஸ்தகத்தின் தலைப்பு மேலே தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிஜமான தலைப்பு இதுவே : ‘லவ்வைச் சொல்லக்கூடாத சில ஜிவ் வழிகள்!’ )

குடிகாரன்

அந்த பிராந்தி கடையில ஏன் இவ்வளவு பெண்கள் கூட்டம்?
இரண்டு பிராந்தி பாட்டில் வாங்கினா. ஒரு ஜாக்கெட் பிட் இலவ சமாம்...!
------------------------------------------------------------------------------------
குடி குடியைக் கெடுக்குமாடா?
நீ வாங்கிக் கொடுத்தா உன் குடி கெடும் நான் வாங்கிக் கொடுத்தா என் குடி கெடும்.
------------------------------------------------------------------------------------
எங்கப்பா சொத்து முழுதையும் குடிச்சே அழிச்சுட்டார்
அப்போ உனக்குன்னு எதுவும் வைச்சுட்டுப் போகலியா?
ஒரு குவார்ட்டர் கூட வைச்சுட்டுப் போகலை.
------------------------------------------------------------------------------------
டாக்டர் : எப்போதெல்லாம் நீங்க குடிக்கிறீங்க?

நோயாளி : எனக்கு சோகம் வரும் போது எல்லாம்!.

டாக்டர் : என்ன சோகம் ?

நோயாளி : இப்படி குடிச்சு உடம்ப கெடுத்துக்குறேனே ன்னு தான்!.

டாக்டர் : ???!!!
------------------------------------------------------------------------------------
ஒரு பாரில் நம்ம ஜோன்ஸ். அவருக்கு இருபுறமும் ஆட்கள் நின்றுகொண்டு மது வாங்கிக்கொண்டிருந்தனர்.
ஒருவர் : ஜானி வாக்கர் சிங்கிள்
மற்றொருவர் : பீட்டர் ஸ்காட்ச் சிங்கிள்
இன்னொருவர் : நெப்போலியன் சிங்கிள்
அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த ஜோன்ஸ் கேட்டார், ஜோன்ஸ் மேரீட்
------------------------------------------------------------------------------------
அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற?
அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன்.
-------------------------------------------------------------------------------------
ஏன் குடிச்ச?
ரொம்ப கவலையாய் இருந்தது அதான் குடிச்சேன்

அப்படி என்ன கவலை?

நான் ரொம்ப குடிக்கிறேன் என்று.
------------------------------------------------------------------------------------

காதல் நகைச்சுவை கதைகள்

காத‌‌ல் நகை‌ச்சுவைக‌ள் ஏராள‌ம் உ‌ண்டு. அவை வெறு‌ம் நகை‌ச்சுவை‌க்காக ம‌ட்டுமே. அ‌ந்த ரக‌த்‌தி‌ல் தா‌ன் இவையு‌ம் சேரு‌ம்.

காதலிக்கும்போது காதலி பேசுவாள், காதலன் கேட்பான்.

திருமணத்திற்குப் பிறகு காதலன் பேசுவான், காதலி கேட்பாள்.


சில ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பேசுவார்கள். ஊரே கேட்கும்.


வாய்ப்பு கிடைத்தால்

ஒரு வங்கியில் கொள்ளையன் வங்கியை கொள்ளை அடித்துவிட்டு அங்கிருந்து வாடிக்கையாளர் ஒருவனிடம் நான் வங்கியை கொள்ளை அடித்ததை நீ பார்த்தாயா என்று கேட்டான்.

அதற்கு அந்த வாடிக்கையாளர் ஆம் என்றான்.

உடனே கொள்ளையன் அவனை சுட்டுவிட்டான்.
பிறகு ஒரு ஜோடியிடம் வந்து பெண்ணிடம் நான் கொள்ளையடித்ததை நீ பார்த்தாயா என்று கேட்டான்.

அதற்கு அந்த பெண் நான் பார்க்கவில்லை. ஆனால் இவர் பார்த்துவிட்டார் என்றாள்.

தம்பதிகளின் விருப்பம்

ஒரு தம்பதியினர் கோயிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு கிணறு இருந்தது. அது விருப்பத்தை நிறைவேற்றும் கிணறு. அதனிடம் சென்று கணவன் தன் விருப்பத்தைக் கூறிவிட்டு வந்தான்.

பிறகு மனைவி அந்த கிணற்றுக்கு அருகே சென்றாள். அவளுக்கு உயரம் போதாததால் கொஞ்சம் எட்டிப்பார்த்தால். அவ்வளவுதான் அவள் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள்.

கணவன் பதறியபடி, நிஜமாகவே பலிக்கிறதே என்றான்.

Saturday, March 6, 2010

cool jokes but small

One word makes you cool.

One word brings you bright.

One word gives you too much happiness.

That word

"BIMBILIKIPILAAPI"