Tuesday, September 14, 2010

ஃபேஸ்புக்கின் புதிய பாதுகாப்பு அமைப்பு ....



நியூயார்க்: தனது பயனீட்டாளர்களுக்கு, புதிய, கணக்கு பாதுகாப்பு அமைப்பினை ஃபேஸ்புக் இணையதளம் அறிமுகப் படுத்த உள்ளது.

ஃபேஸ்புக் இணையதளம் நாளுக்கு நாள் இளைஞர்களிடையே புகழடைந்து வருகிறது. ஆனால், மற்றொருவரின் கடவுச்சொல்லை தெரிந்துக் கொண்டு, அவர்ளது ஃபேஸ்புக் கணக்கில் அத்துமீறி நுழையும் விஷமிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. இதனைக் கருத்தில் கொண்டு புதிய, கணக்கு பாதுகாப்பு அமைப்பு ஒன்றினை ஃபேஸ்புக் இணையதளம் அறிமுகப் படுத்தப் போகிறது.

அதன் மூலம், தனது ஃபேஸ்புக் கணக்குக்குள், வேறு யாராவது நுழைந்துள்ளார்களா என்பதை, எங்கிருந்து வேண்டுமென்றாலும் அறிந்துக் கொள்ளலாம்.

இதனை செய்ய, ஃபேஸ்புக் கணக்குக்குள் நுழைந்து, கணக்கு (Accounts) என்ற சுட்டியை சொடுக்க வேண்டும். பின்னர், கணக்கு அமைப்புகள் (Account Settings) என்ற சுட்டியை சொடுக்க வேண்டும். அதில் கணக்கு பாதுகாப்பு (Account Security) என்ற சுட்டியை சொடுக்கினால், அந்தக் குறிப்பிட்ட ஃபேஸ்புக் கணக்குக்குள் வேறு யாரெல்லாம் நுழைந்துள்ளார்கள், எந்த கருவியின் மூலம் நுழைந்துள்ளனர், எந்த ஊரில் இருந்து ஃபேஸ்புக் கணக்குக்குள் பிரவேசித்துள்ளனர் என்ற விவரங்கள் தெரிந்து விடும்.

ஒரு வேளை, அவ்வாறு எவரேனும் அத்துமீறி நம் ஃபேஸ்புக் கணக்குக்குள் நுழைந்திருந்தால், அவர்கள் பற்றிய விவரங்கள் ஒளிரும் இடத்திற்கு அருகிலேயே இருக்கும், 'பணியை முடி' (End Activity) என்ற பொத்தானை சொடுக்கி, அழையா விருந்தாளிகளை வெளியேற்றலாம்.

பின்னர், மறக்காமல் நம் கடவுச்சொல்லை மாற்ற வேண்டும்.

ஃபேஸ்புக்கின் இந்த புதிய, பாதுகாப்பு அமைப்பு ஓரிரு வாரங்களில் அறிமுகப் படுத்தப் பட உள்ளது.

2 comments:

  1. சூப்பர்... அருமையான பகிர்வு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அத்துமீறி நுழைபவர் எமது விபரங்களை மாற்றிவிட்டால் என்ன செய்வது? நான் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன், facebook தனது பயனாளர்கள் பற்றி எப்போதுமே கவலைப்பட போவதில்லை..

    ReplyDelete