Sunday, September 19, 2010

செப்டம்பர் 30ல் கூகுள் வேவ்



கூகுள் வேவ் குறித்து கம்ப்யூட்டர் மலரில் வந்த தகவல்கள் உங்கள் மனதில் இன்னும் இருக்கும் என எண்ணுகிறேன். சென்ற மே மாதம் நடைபெற்ற உலகளாவிய கருத்தரங்கில் இது குறித்த அறிவிப்பினை கூகுள் முதல் முதலில் வெளியிட்டது. ஆனால் அதனை அடுத்து மைக்ரோசாப்ட் தன் பிங் (Bing) சேவை குறித்து செய்திகள் வெளியிட்டு
டிஜிட்டல் மீடியா கவனத்தைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டது.

கூகுள் மே மாதம் அறிவித்த போது இது கூகுள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி சாதனையாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. தற்போதைய ஜிமெயிலின் ஒரு எக்ஸ்டென்ஷனாகத்தான் இது இருக்கும் என அனைவரும் எண்ணினார்கள். இதன் மூலம் பயனாளர்கள் இமேஜஸ், வீடியோ மற்றும் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளலாம் என்றும் பலர் ஒரே நேரத்தில் எளிதாகத் தங்களுக்குள் உரையாடலை நடத்திக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 30ல் இந்த சேவை பொதுமக்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது. ஏற்கனவே 6000 டெவலப்பர்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு அவர்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி இதனை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தந்து வருகின்றனர். அடுத்து பொது மக்களில் ஒரு லட்சம் பேரைத் தேர்ந்தெடுத்து சிக்கள்கள் மற்றும் பிரச்சினைகளைக் கேட்க கூகுள் முடிவு எடுத்துள்ளது. இவர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று இன்னும் கூகுள் அறிவிக்கவில்லை. இது குறித்து தொடர்ந்து தகவல் பெற http://wave.google.com என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.

படைப்பு பிடித்திருந்தால் மறக்காம ஒட்டு போடுங்க....

No comments:

Post a Comment